School Anthem

கல்லூரி கீதம்
கலைபயில் தருசிறுவர் குழுமிக்
கலைவளர் பதி போற்றுவோம்

அளவை அருணோதயக் கல்லூரி
மலைவிளக்கென நிலைநின் றோங்க
வளர்மதியமும் கதிரும்போல
வளர்ந்து கலைகள் பொலிந்து தேங்க
(கலைபயில்)
ஆரியம் தமிழ் ஆத்ம ஞானம்
ஆங்கிலம் இசை கலை விஞ்ஞானம்
வீரியந் தரும் உடலின் பயிற்சி
விளங்கு மதனா லடைந்தோம் உயர்ச்சி
(கலைபயில்)
பிறவி தொறுமே தொடரும் கல்விப்
பேற்றை எமக்கு அளித்த அன்னையுள்
திறனை நினைத்து தினமு முனது
சேவை செய்குவோம் மனதிலுவந்து
(கலைபயில்)
அருணா சலவேள் எடுத்தவொன்று
அசையா அசல மாகநின்று
அருணன் வாழும் ஊழிநின்று
வாழ்க வாழ்க வாழ்கவென்று                               (கலைபயில்)